தேவதையா? சூனிய கிழவியா?
மனைவி தேவதையாக இருப்பதும் சூனியக் கிழவியாக மாறுவதும் கணவர் கையில் தான் உள்ளது.
கணவர் தேவராக இருப்பதும் சூனியக் கிழவராக மாறுவதும் மனைவி கையில் தான் இருக்கிறது.
ஒருவர் சொந்தமாக யோசித்து, ஒரு முடிவு எடுத்து, அதன்படி வாழ்ந்தால் அவர் தேவதையாக / தேவராக இருக்கிறார்.
ஒருவர் மற்றவரால் வலுக் கட்டாயமாக முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளும்பொழுது பொது சூனியக் கிழவியாக / கிழவராக மாறிவிடுகிறார்.
உதாரணமாக கணவரும் மனைவியும் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.
மனைவிக்கு அந்த வீடு மிகவும் பிடித்திருக்கிறது மேலும் வசதியாக இருக்கிறது. எனவே மகிழ்ச்சியாக வாழ்கிறார்.
கணவனுக்கு அந்த வீடு பிடிக்கவில்லை. சௌகரியமாக இல்லை. ஏனென்றால் வீட்டுக்கும் அலுவலகத்திற்கும் தூரம் அதிகம், வாடகை அதிகம். ரோடு சரியில்லை. இப்படி பல காரணங்கள்.
ஆனால் அந்தக் கணவர் இந்த வீடு பிடிக்கவில்லை மற்றும் சௌரியம் இல்லை என்பதை மனைவியிடம் சொல்லாமல் மனதுக்குள்ளயே யோசித்து யோசித்து ஒரு நாள் வேறு வீடு மாற்றுவதாக முடிவு எடுத்து விட்டார்.
இப்பொழுது மனைவியிடம் திடீரென சென்று இந்த வீடு சரியில்லை, வேறு வீடு பார்த்திருக்கிறேன் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறினால். மனைவிக்கு ஒன்றுமே புரியாது. கணவரின் கஷ்டம் மனைவிக்கு தெரியாது. மேலும் மனைவி அந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதனால் மனைவிக்கு மன உளைச்சல் ஏற்படும். மேலும் கணவரிடம் கருத்து வேறுபாடு வரும். சண்டை கூட வரலாம். அதன்பின்பு மனைவி சூனிய கிளவியாக மாறிவிடுவார்கள்.
இந்த கதையில் கணவர் பல நாட்களாக யோசித்து முடிவு எடுத்திருக்கிறார். ஆனால் மனைவிக்கு திடீரென இந்த முடிவு அதிர்ச்சியாக இருந்ததால் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
உண்மையில் கணவர் என்ன செய்திருக்க வேண்டும் என்றால். வீட்டை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த அந்த வினாடி முதல் தினமும் மனைவியிடம் இந்த வீடு ஏன் பிடிக்கவில்லை எதனால் அசௌகரியமாக இருக்கிறது என்ற விஷயத்தை மட்டும் மெதுவாக சொல்லிக் கொண்டே வர வேண்டும்.
இப்படி தொடர்ந்து சொல்லும் பொழுது ஒரு காலகட்டத்தில் மனைவி கணவனின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் வாயிலேயே "ஏங்க, வேற வீடு பாருங்க" என்று கூறுவார்கள். அதன் பிறகு வீடு மாற்றினால் மனைவி தேவதையாக இருப்பார்.
எப்பொழுதுமே நாம் நம்முடன் வாழும் நபர்கள் சம்பந்தமாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அதில் உள்ள நல்லது கெட்டதை நிறைய பேச வேண்டும். பேசி புரிய வைத்த பிறகு தான் அந்த முடிவு எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் தேவதையாக இருப்பார்கள். இல்லையென்றால் சூனிய கிளவியாக மாறிவிடுவார்கள்.
பல வருடமாக இலுமினாட்டி அரசாங்கம் இந்த தத்துவத்தை தான் உலக மக்களுக்கு பயன்படுத்தி வருகிறது.
உதாரணமாக திடீரென லாக் டவுன் என்று கூறினால் நமக்கு கோபம் வரும். பொதுமக்கள் சூனிய கிளவியாக மாறிவிடுவார்கள். எனவே மெதுவாக சீனாவில் வைரஸ் வந்துவிட்டது ஜப்பானில் பலபேர் இறந்து விட்டார்கள் கொரியாவில் அப்படி ஆகிவிட்டது இலங்கையில் இப்படி ஆகிவிட்டது என்று நியூஸ் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். கடைசியில் ஊரடங்கு என்று நம்மை கட்டிப்போட்டு விடுவார்கள். எனவே பொதுமக்கள் தேவதையாக வீட்டில் முடங்கி கிடப்பார்கள்.
அரசாங்கம் ஆழ் துளை கிணறு ( போர்வெல் ) போடுவது தடை விதிக்க வேண்டும் என்ற முடிவு செய்தால் அதை உடனே மக்களிடம் சொல்ல மாட்டார்கள். ஒரு சிறு குழந்தை ஆழ்துளை கிணறில் விழுந்து இறந்ததை 30 நாட்கள் டிவி / நியூஸ் பேப்பர் / youtube ஆகியவற்றில் காண்பித்து அதைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.
கடைசியாக இனிமேல் யாராவது போர்வெல் போட வேண்டும் என்றால் அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டும் என்று அனுமதி வாங்குவதற்கு கடுமையான விதிமுறைகள் ஏற்படுத்தி விடுவார்கள்.
இலுமினாட்டி அரசாங்கம் கெட்ட விஷயத்தை புகுத்துவதற்காக இந்த தத்துவத்தை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இதே தத்துவத்தை பயன்படுத்தி நல்ல விஷயங்களை செய்யலாம்.
இதே கான்செப்ட்டை நல்ல நோக்கத்திற்காக, மகிழ்ச்சியாக வாழ்வதற்காக, ஒற்றுமையாக வாழ்வதற்காக நம் வீட்டில், அலுவலகத்தில், கம்பெனியில், நண்பர்களிடம், உறவினர்களிடம் கடைபிடிக்க வேண்டும்.
எப்பொழுதுமே நமது உணர்வுகளை, பீலிங்க்குகளை நம்முடன் வாழும் நபர்களுக்கு அடிக்கடி கூறிக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஒரு முடிவெடுக்கும் பொழுது அதற்கான காரணத்தை புரிந்து நமக்கு உதவி செய்வார்கள். இல்லை என்றால் முரண்பட்டு சண்டை போடுவார்கள்.
உதாரணமாக ஒரு கணவர் தனது வியாபாரத்தில் பல வருடமாக பல நஷ்டங்களை சந்தித்து வருகிறார். ஆனால் இதை மனைவியிடம் கூறுவதே இல்லை. திடீரென பெரும் நஷ்டத்தில் மாட்டி அதிலிருந்து வெளி வருவதற்காக நகைகளை அடமானம் வைக்கலாம் அல்லது விற்கலாம் என்று மனைவியிடம் கேட்கிறார்.
திடீரென கேட்டதால் மனைவி வருத்தம் அடைவார் அல்லது கோபம் அடைவார் மேலும் அவர் சூனியக் கிழவியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே ஆரம்பத்திலிருந்து தினமும் நடக்கும் அலுவலக விஷயத்தை கொஞ்சம் கொஞ்சமாக மனைவிடம் கூறி வந்திருந்தால் இந்த பெரும் நஷ்டம் வரும் பொழுது, அதை சொல்லும் பொழுது, அந்த மனைவியே தானாக முன்வந்து விருப்பத்தோடு எனது நகையை தருகிறேன் நீங்கள் நிம்மதியாக இருங்கள் என்று அவரே கொடுப்பார் அப்பொழுதுதான் அவர் தேவதையாக இருப்பார்.
இப்படி ஆயிரம் உதாரணங்கள் கூறலாம். இரண்டு மூன்று உதாரணங்களில் புரிந்து கொள்ளும் தன்மை உங்களுக்கு இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
அதாவது நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கு பின்னால் பல விஷயங்கள் இருக்கும். அந்த விஷயத்தைப் பற்றி உடன் வாழும் நபருக்கு புரிய வைக்காமல் முடிவை மட்டுமே கூறுவதால் தான் சண்டை வருகிறது. மனக்கசப்பு வருகிறது.
பல வீடுகளில் யாரோ ஒருவர் எடுக்கும் முடிவில் மொத்த வீட்டில் உள்ள அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள். இது தவறு.
எனவே இனிமேல் ஒரு முடிவு எடுக்கும் பொழுது அதில் உள்ள நல்லது / கெட்டது / காரணம் / காரியத்தை உடன் வசிக்கும் நபர்களுக்கு எடுத்து சொல்வது நமது கடமை. அப்பொழுதுதான் குடும்பத்தில் சண்டை இல்லாமல் நிம்மதி, அமைதி, HAPPY ஆகியவை இருக்கும்.
இப்பொழுது மீண்டும் ஒருமுறை ஆரம்பத்தில் இருந்து இந்த கட்டுரையை படியுங்கள் உங்களுக்கு விரிவாக புரியும்.
நம்முடன் வாழும் நபர்கள் தேவதையாக வாழ்வது நமது கையில் தான் உள்ளது.
இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.