கொட்டாவி நல்லதா கெட்டதா?


பதில் : கொட்டாவி என்பது நல்லதும் இல்லை கேட்டதும் இல்லை. அது ஒரு அறிகுறி.


கொட்டாவி என்பது கெட்ட ஆவி உடலில் இருந்து வெளியே செல்கிறது என்று சிலர் கூறுவார்கள். அது அப்படி அல்ல.


கொட்டாவி என்பது வெளிக்காற்று உள்ளே செல்வதாகும்.


நமது உடலில் காற்று மற்றும் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படும் பொழுது கொட்டாவி வரும்.


எனவே கொட்டாவி வந்தால் நமது உடலில் காற்றின் தேவைக்கும், காற்றின் இருப்புக்கும் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.


அதாவது நமது உடலுக்கு தேவைப்படும் காற்றைவிட சுவாசிக்கும் காற்று குறைவாக இருக்கிறது.


உதாரணமாக சிலருக்கு காரில் போகும்பொழுது கொட்டாவி வரும்.


காரில் பலரும் அமர்ந்திருப்பதால் ,சிறிய இடமாக இருப்பதால் ,காற்று குறைவாக இருப்பதால் உங்களுக்கு காற்றுத் தேவைப்படும். எனவே கொட்டாவி வரும்.


தூக்கம் வருவதற்கு முன் கொட்டாவி வரும் ஏன்?


நமது உடலில் அசைவுகள் இருக்கும்பொழுது காற்று அதிகமாக வெளியிலிருந்து உள்ளே செல்லும். அதேசமயம் உடலில் அசைவு குறையும் பொழுது காற்று உள்ளே செல்வது குறைகிறது.


நமக்கு தூக்கம் வரும் பொழுது உடலில் அதிக அசைவில்லாமல் அமைதியாக அமர்ந்து இருப்போம். அப்பொழுது காற்றின் தேவை அதிகரிப்பதால் கொட்டாவி வருகிறது.


எனவே இனிமேல் கொட்டாவி வந்தால் பயந்து விட வேண்டாம். அது நோயல்ல.


நீண்ட மூச்சு விடுங்கள், முடிந்தால் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள் , காற்றோட்டமான இடத்தை உருவாக்குங்கள், ஜன்னல் அடைத்து இருந்தால் திறந்து வையுங்கள் சரியாகிவிடும்.


கொட்டாவி வரும் பொழுது நாடி சுத்தி, பிராணாயாமம் , பஸ்திரிகா, உஜ்ஜை, கபாலபதி , அனுலோமா , வினுலோமா , அக்னி சார் , சுதர்ஸன் கிரியா இதுபோன்ற பயிற்சிகள் தெரிந்தவர்கள் ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் செய்தால் உடல் நார்மல் ஆகிவிடும்.


நான் இப்பொழுது சொல்லிய பயிற்சிகளில் சில பயிற்சிகள் யாருக்காவது தெரியாமல் இருந்தால் காத்திருங்கள். ஒவ்வொரு பயிற்சி சம்பந்தமாக விரைவில் ஒரு பதிவை நான் வெளியிடுவேன்.


இப்படிக்கு

ஹீலர் பாஸ்கர்