மகா சிரசு முத்திரை:

'எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்' என்பது பழமொழி. 'சிரசு' என்றால் தலை. உடலில் உள்ள அனைத்து அவயங்களும் தலையுடன் தொடர்புடையவை.


'மகா' என்பது பெரிய, சிறப்பு வாய்ந்த என்று பொருள். 'மகா சிரசு முத்திரை' என்றால் "பெரிய தலைசிறந்த முத்திரை" என்று பொருள். இந்த முத்திரை பல உடல் மற்றும் மன நோய்களுக்கு நிவாரணமாக செயல்படுகிறது, குறிப்பாக தலைவலி, முகவலி, கண்ணிலுள்ள வலி, மற்றும் கழுத்துவலி போன்றவற்றில்.


நிறைய பேருக்கு தலைவலி ஒரு தீராத பிரச்சினையாக உள்ளது. இந்த முத்திரையைச் செய்வதன் மூலம், தன்னடக்கம் மற்றும் சுவாசம் முறையாக இருந்து, உடல் நிவாரணம் பெறும்.


செய்முறை:


1. கையில் கட்டை, ஆள்காட்டி, மற்றும் நடு விரல்களின் நுனிகளை ஒன்றாக இணைத்து பிடிக்க வேண்டும்.

2. மோதிர விரலை மடக்கி உள்ளங்கையின் நடுவில் தொட வேண்டும். சுண்டு விரல் நேராக இருக்க வேண்டும்.

3. இரு கைகளிலும் இவ்வாறு செய்து பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.


நேர அளவு:


இந்த முத்திரையை தினமும் மூன்று வேளைகளில் ஆறு நிமிடங்கள் செய்வது பயனுள்ளது.


பலன்கள்:


1. டென்ஷன் குறையும்.

2. தலைவலி மற்றும் கழுத்துவலி நீங்கும்.

3. கண்ணுக்குச் சுற்றியுள்ள வலிகள் தீரும்.

4. சளி மற்றும் ஜலதோஷம் போன்ற பிரச்சினைகள் குறையும்.

5. உடல் முழுவதும் சக்தி அலைகள் சென்று சுகத்தை தரும்.


நன்றி: யோகினி கவிதா ஓம்குமார், ஹீலர் பாஸ்கர்