பதிவு எண் : 432 : நர்சிசிஸ்ட் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் என்றால் என்ன? ( Narcissistic personality disorders )


இது ஒரு வித்தியாசமான வியாதி. இந்த வியாதி உள்ளவர் உடன் வாழும் நபர்கள் மிகவும் மன உளைச்சலோடு இருப்பார்கள்.


யாருக்காவது மன உளைச்சல் அதிகமாக இருந்தால் தயவு செய்து இந்த கட்டுரையை பொறுமையாக முழுமையாக படியுங்கள்.


இந்த வியாதி உள்ளவர்கள் என்ன செய்வார்கள்???


O. இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் தான் முடிவெடுப்பார்கள். அடுத்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இவர்கள் தான் முடிவு எடுப்பார்கள்.


O. நமக்கு பிடித்த விஷயத்தை பிடிக்காத விஷயமாக மாற்றுவார்கள்.


O. நமக்கு பிடிக்காத விஷயத்தை நமக்கு பிடிக்காது என்றும் தெரிந்தும் செய்ய வைத்து அதில் சந்தோஷம் அடைவார்கள்.


O. நாம் புதிதாக எதையும் கற்றுக்கொள்ள விடமாட்டார்கள் அதற்கு முட்டுக்கட்டை போட்டு கொண்டே இருப்பார்கள்.


0. பணம், சொத்து, வேலை, வருமானம் போன்றவற்றை நிர்மூலமாக்ககுவார்கள்.


O. நம்மை அடிமையாக வைத்திருப்பது அவர்களுக்கு ஒரு சந்தோசம்.


O. இவர்களுக்கு வெட்கம், மானம், ரோசம், சூடு, சுரணை, அவமானம் என்று எதுவுமே இருக்காது. தேவைப்பட்டால் சுயநலத்திற்காக இவைகள் இருப்பது போல் நடிப்பார்கள்.


O. நெட்வொர்க் இல்லாத டவுன்லோட் போல சுற்றிக்கொண்டே இருக்கும் அளவுக்கு சுத்த வைப்பார்கள்.


0. எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு பிடித்ததுபோல் நடக்கும் வரை முற்றுப்புள்ளி வைக்க மாட்டார்கள்.


O. அன்பையும் வெறுப்பையும் சமமாக கொடுத்து வைத்திருப்பார்கள். எது உண்மை என்று தெரியாத அளவுக்கு நம்மை குழப்புவார்கள்.


O. மனிதாபிமானம், நன்றி, பொதுநலம், விட்டுக்கொடுத்தல், அன்பு, பாசம், நேசம் இதில் ஒன்று கூட துளியளவும் இவர்களிடம் இருக்காது. ஆனால் இவையெல்லாம் இல்லை என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. கூடவே இருப்பவர்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்ll


O. இவர்களைப்பற்றி மற்றவரிடம் சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். உடன் இருப்பவர்களைத் தவிர மற்ற அனைவரிடமும் நல்ல பேர் வாங்கி வைத்திருப்பார்கள்.


O. நாம் செத்தால் கூட அதற்காக துளியளவும் கவலைப்படாத ஜென்மங்கள்.


இவர்களை ஜெயிப்பது எப்படி.


1. முற்றிலுமாக இவர்களது தொடர்பை துண்டித்து தனியாக வாழ்வது மட்டுமே நிரந்தரத் தீர்வு. இதைத்தான் நான் முழுமையாக தீவிரமாக வற்புறுத்துகிறென்.

NO CONTACT .


2. முதல் தீர்வு எடுக்க முடியாதவர்கள் முடிந்தவரை விலகி இருந்து அவர்களோடு முடிந்தவரை ஒதுங்கி வாழ்வது சிறந்தது.


3. இரண்டாவது முடிவும் எடுக்க முடியாதவர்கள் அவர்களோடு வாழ்வதற்கு பழகிக் கொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் அவர்கள் திருந்த மாட்டார்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று புரிந்துகொண்டு விதி என்று வாழ்ந்து விடுங்கள்.


4. அவர்களை திருத்த முயற்சி செய்யாதீர்கள் அவர்களை திருத்த முடியாது திருத்த முயற்சி செய்தால் நீங்கள்தான் சோர்ந்து போவீர்கள்.


5. அவர் அவர்கள் தங்கள் வசதிக்கு பலத்துக்கு அறிவுக்கு ஏற்றவாறு தப்பித்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சொல்ல முடியும்.


6. இவர்களால் பாதித்தவர்கள் இனிமேல் செல்ப்கேர் எனப்படும் தனக்குத்தானே மகிழ்ச்சியாக இன்பமாக வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.


7. அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்றால் அவர்கள் என்ன தோன்றுகிறதோ அதை பேசுவார்கள். நாம் என்ன தோன்றுகிறதோ அதை பேச மாட்டோம். பாவம் என்று பார்த்து சமுதாயத்திற்காக சண்டை வரக்கூடாது என்று மாற்றி பேசுவோம். இனிமேல் நாமும் எப்பொழுது என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே பேசினால் மட்டுமே இவர்களோடு வாழ முடியும். உங்களுக்கு எப்பொழுது என்ன தோன்றுகிறதோ அப்படியே பேசுங்கள் அதனால் வரும் பக்க விளைவுகளை பற்றி கொஞ்சம் கூட யோசிக்க கூடாது.


8. இவர்களிடம் நாம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது எதை எதிர்பார்த்தாலும் நாம் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவோம் எனவே ஜீரோ எதிர்பார்ப்புக்கு நம் மனதை தயார் செய்து கொள்ள வேண்டும்.


9. அவர்கள் ஒரு விஷயத்தில் நம்மிடம் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதை ஞாபகம் வைத்து அதேபோல் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் இதற்கு கண்ணாடி சிகிச்சை என்று பெயர்.


உதாரணமாக நமக்கு காய்ச்சல் வரும்பொழுது அவர்கள் நம்மை கொஞ்சம் கூட கவனிக்கவில்லை என்றால் நாமும் அவர்களுக்கு காய்ச்சல் வரும்போது கொஞ்சம் கூட கவனிக்கக் கூடாது.


உதாரணமாக அவர்கள் நம்மிடம் அன்பாக நடந்து கொள்ளவில்லை என்றால் நாமும் அவர்களுக்கும் கொடுத்தும் அன்பை நிறுத்திவிட வேண்டும்.


மற்றும் பல....


10. நமது குணங்களை மாற்றக்கூடாது. நமது இயல்பான குணத்தை உலகில் உள்ள அனைவரிடமும் காட்ட வேண்டும். ஆனால் இவர்களிடம் பழகும் பொழுது மட்டும் தனியாக ஒரு ஸ்பெஷல் குணத்தை தயார் செய்து அதன்படி பழகவேண்டும்.


11. இவர்களுடன் வாழ வேண்டும் என்றால் 6 மாதங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக பத்துநாள் விபாசனா பயிற்சிக்கு சென்று வரவேண்டும்

12. இதுபோல பாதிக்கப்பட்ட நபர்களிடம் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும். பல நாடுகளில் இவர்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் குழு அமைத்து எப்படி இவர்களிடம் இருந்து தப்பிப்பது என்று ஐடியா செய்து தப்பித்து வாழ்கிறார்கள்.


13. கண்டிப்பாக தினமும் ஒரு மணி நேரமாவது யோகா பயிற்சி செய்ய வேண்டும்


14. நமது மனதில் அவர்கள் மேல் இருக்கும் லவ் என்ற காதலை முதலில் தூக்கி குப்பையில் போட வேண்டும். ஏனென்றால் அவர்கள் நம்மை காதலிக்கவில்லை என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.


12. இவர்கள் சொல்லும் எதையும் ( நல்லது, நல்லதற்றது)மனதில் ஏற்ற கூடாது. ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியாக சென்று விடவேண்டும்.


15. அவர்களாகவே திருந்த வேண்டும் என்று முடிவு செய்தாலே ஒழிய இதற்கு தீர்வு கிடையாது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்கள், அவர்கள் செய்வது தவறு என்று நினைப்பதே கிடையாது. அதனால் அவர்களால் திருந்த முடிவதே இல்லை. நீங்கள் தான் திருந்த வேண்டும். திருந்த வேண்டியது நீங்கள்... அவர்கள் இல்லை.


16. இவர்கள் சொல்லும் எதையும் ( நல்லது, நல்லதற்றது)மனதில் ஏற்ற கூடாது. ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியாக சென்று விடவேண்டும்.


17. சமீபமாக இந்த வியாதி அதிக நபர்களுக்கு வந்து கொண்டிருக்கிறது.


18. இவர்களுடன் இருக்கும் பொழுது இவர்கள் செய்யும் அட்டூழியங்களை வீடியோ ஆடியோ இந்த அளவுக்கு ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறோமோ அந்த அளவுக்கு பிற்காலத்தில் நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.


19. "THE EMPATHS JUNCTION" இந்த யூடியூப் சேனலில் நர்சிசிஸ்ட் மனிதனால் பாதிக்கப்பட்ட திருமதி. பிரதீபா ( +916382043196 ) என்பவர் மிகவும் தெளிவாக அதைப் பற்றி பேசுகிறார்கள் தயவுசெய்து அனைத்து வீடியோவையும் முழுமையாக கேளுங்கள். தேவைப்பட்டால் அவரிடம் கவுன்சிலிங் பெற்றுக் கொள்ளுங்கள்.


Watch "THE EMPATHS JUNCTION" on YouTube


https://youtube.com/channel/UCkGBFKeNQ4idsOY41pX3yiA


NARCISSISTC PERSONALITY DISORDER


1.

https://blogs.psychcentral.com/relationships/2017/03/narcissistic-abuse-and-the-symptoms-of-narcissist-victim-syndrome/


2.


https://www.higherperspectives.com/never-get-truth-narcissist-2638688654.html


3.


https://www.thelist.com/41680/know-someone-love-narcissist/


20. நந்தகுமார் என்பவர் யூடியூபில் நர்சிசிஸ்ட் சம்பந்தமாக பேசியிருக்கிறார் இந்த வீடியோவை பாருங்கள்.


https://youtu.be/xYSq1sQa0Mo


21. நர்சிசிஸ்ட் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் வியாதி உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். கணவர் மனைவி, அம்மா, அப்பா, குழந்தை, சொந்தக்காரர்கள், அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள், உங்கள் உயர் அதிகாரி ,பக்கத்து வீட்டுக்காரர் என்று யாருக்கு வேண்டுமென்றாலும் இந்த வியாதி இருக்கலாம்.


22. குறிப்பாக இந்த வியாதி இருக்கும் நபருக்கு தான் அரசாங்க மற்றும் தனியார் உயர் அதிகாரி வேலை கிடைக்கும்.


23. விரைவில் இது சம்பந்தமாக வீடியோ வகுப்பு நடத்துவதாக திட்டம் வைத்திருக்கிறேன். பாதித்தவர்கள் கலந்துகொண்டு உங்களை காப்பாற்றிக் கொள்ளலாம்.


24. இவர்களால் ஏற்பட்ட மன உளைச்சலை சரி செய்வதற்கும் மீண்டும் இவர்களோடு சண்டையிட்டு ஜெயிப்பதற்கு அல்லது நம்மை தற்காத்துக் கொள்வதற்கும் மலர் மருத்துவம் மிகவும் உதவியாக இருக்கும். மலர் மருத்துவம் வேண்டுமென்றால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் 9500015017. ( ONLY WHATSAPP )


25. உங்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் உறவினர்கள் யாராவது மன உளைச்சலோடு இருந்தால் இந்த கட்டுரையை அவர்களுக்கு அனுப்பி வைத்து அவர்களை காப்பாற்றுங்கள்.


26. இந்தக் கட்டுரை, சைகாடிக் மருத்துவர்கள், வக்கீல்கள், நீதிபதிகள், காவல்துறையினர், கவுன்சிலிங் கொடுக்கும் நபர்கள் படித்துப் புரிந்து கொண்டால் சிறந்த முறையில் கவுன்சிலிங் அல்லது தீர்வு சொல்லலாம். எனவே உங்களுக்கு தெரிந்த மேற்கண்ட நண்பர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு இந்த கட்டுரையை அனுப்பி வையுங்கள்.


இப்படிக்கு.


நர்சிசிஸ்ட் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் வியாதி உள்ள நபரால் நேரடியாக பாதிக்கப்பட்ட...


ஹீலர் எம்பத் பாஸ்கர்.

Healer Empath Baskar.