உருவக்கேலி : BODY SHAMING.


அடுத்தவர் உருவத்தை / நிறத்தை / இயலாமையை‌ / உடல் குறைபாட்டை கேலி செய்யும் செயல் அநாகரிகமானது.


குண்டு, ஒல்லி, மொண்டி, சொட்டை, மொட்டை , அனாதை, மலடி , விதவை, கருவாயா, கருமி, குட்டையன், கூண், கட்டையன்,நெட்டையன், வளர்ந்தவன், மூக்கன், கோழி முட்டைக்கண், வெள்ளையன், கோழை, ஏழை இதுபோன்று ஒருவரை கேலி செய்வது அநாகரிகமானது.


சிலர் விளையாட்டாக தானே கேலி செய்கிறோம் என்று கூறுகிறார்கள். விளையாட்டாக கூறினாலும் கண்டிப்பாக மனதை காயப்படுத்தும் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.


தமாசாக / விளையாட்டாக / ஜாலியாக பொழுதுபோக்காக கூட இது போல கேலி செய்யக்கூடாது.


நாங்கள் யாரை கேலி செய்கிறோமோ அவர்களே சும்மாதான் இருக்கிறார்கள். அவர்களே ரசிக்கிறார்கள். அவர்களே சிரிக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது தவறு என்று எப்படி சொல்ல முடியும் என்று சிலர் கேட்கலாம்.


உண்மையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வருத்தமாக, கவலையாக, கடுப்பாக தான் இருக்கும். ஆரம்பத்தில் சில, பல முறை சொல்லி பார்த்திருப்பார்கள். அவர்கள் சொல்வதற்கு மதிப்பு கொடுக்காமல் மீண்டும் மீண்டும் கேலி பேசுவதால் அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு சமாளிக்க ஆரம்பித்து விட்டார்கள். அல்லது பழகிவிட்டார்கள் என்று கூட சொல்லலாம்.


கேலி செய்யும் நபர்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாது என்று முடிவு செய்து, தனது மன கஷ்டத்தை சொல்வதை நிறுத்தி விட்டார்கள். வேறு வழி இல்லாமல் நீங்கள் கேலி செய்யும் பொழுது அதை அவர்கள் ரசிப்பது போல, சிரிப்பது போல, அதனால் பாதிக்காது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.


குறிப்பாக டிவி சேனல் நடத்தும் ப்ரோக்ராம்களில் இது அதிகமாக இருக்கிறது.


இப்பொழுது திரைப்படங்கள், ரேடியோ, நியூஸ் பேப்பர், டிவி நிகழ்ச்சி, நாடகம், விளம்பரம் ,நண்பர்கள், கல்லூரி, பள்ளி, குடும்பத்தில், அலுவலகத்தில் கூட கேடி பேசுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது.


இது தவறான மற்றும் அநாகரிகமான பழக்கம் என்பதை நாமும் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் / குழந்தைகளுக்கும்‌ / மாணவர்களுக்கும் அதை சொல்லி புரிய வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


தயவுசெய்து இந்த கட்டுரையை விஜய் டிவியில் இருக்கும் அன்பு உள்ளங்களுக்கு அனுப்பி வையுங்கள்.


மனதில் அன்பு, பாசம், மரியாதை, மதிப்பு, அக்கறை போன்ற நல்ல எண்ணம் உள்ள மனிதர்களுக்கு அடுத்தவர்களை உருவக்கேலி பேசும் எண்ணம் வரவே வராது.


உருவக்கேலி - அநாகரிகம்.


இப்படிக்கு.

ஹீலர் பாஸ்கர்.